பூமியை குடைந்து ஆராய்ச்சி. நில நடுக்கம் ஏற்படுவது எப்படி?

பூமிக்கு அடியில் உள்ள பாறைத் தட்டுகள் நகர்ந்து இடம் பெயர்வதால் பூகம்பம் ஏற்படுவதாக கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அந்த பாறை தட்டுகள் எப்படி நகருகின்றன என்பதை கண்டு பிடிக்கும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் புவியியல் பேராசிரியர் மார்க் சோபேக் மற்றும் அமெரிக்காவின் புவியியல் துறையை சேர்ந்த விஞ்ஞானிகள் வில்லியம் எல்ஸ் வொர்த், ஸ்டீபன் க்மேன் ஆகியோர் ஈடுபட்டனர்.

அடிக்கடி பூகம்பம் ஏற்படும் கலிபோர்னியா மாநில கடற்கரையில் உள்ள சான் ஆன்ட்ரூஸ் பால்ட் என்ற இடத்தை இந்த ஆராய்ச்சிக்கு தேர்ந்து எடுத்தனர். அங்கு பார்க் பீல்டு என்ற இடத்தில் 3.7 கிலோ மீட்டர் ஆழத்துக்கு (சுமார் 12 ஆயிரம் அடி) பூமியில் துளை போட்டு அடியில் இருந்து ஒரு டன் மண்ணை எடுத்தனர். அதை ஆராய்ந்ததில் “செர்பென்டைன்“ என்ற பலவீனமான தாது அதில் கலந்து இருப்பது தெரிய வந்தது. 
இது கரையும் மற்றும் படிவமாக மாறும் தன்மை உடையது. இந்த தாது, குழந்தைகள் முகப் பவுடரில் பயன்படுத்தப்படும் “டால்க்“ என்ற வழவழப்பான பொருளாக மாறக் கூடியது என்றும் இதனால்தான் பூமிக்கும் கடலுக்கும் அடியில் உள்ள பாறைத் தட்டுகள் நகர்ந்து, இடம் பெயர்ந்து, பூகம்பம் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள.

No comments:

Post a Comment