பவுன்சர், பீமருக்கு பயந்த கவாஸ்கர்

கிரிக்கெட் அரங்கில் வேகப்புயல்கள் வீசிய பவுன்சர், பீமர் வகை பந்துகளை மிகச் சாதாரணமாக சமாளித்தவர் கவாஸ்கர். ஆனாலும், தனது செல்ல நாய்களான பவுன்சர், பீமர் களை கண்டு கவாஸ்கர் அஞ்சி நடுங்கியதாக ரவி சாஸ்திரி நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார். 

இந்திய கிரிக்கெட் ஜாம் பவான் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட்டில் பத்தாயிரம் ரன்களுக்கு மேல் கடந்து சாதித்துள்ளார். இவரை பற்றி முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, "சுனில் கவாஸ்கர்' என்ற பெயரில் புத்தகம் எழுதியுள்ளார். 

இதில் ரவி சாஸ்திரி எழுதியிருப்பது:பொதுவாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் பயம் தரக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் பவுன்சர்கள் மற்றும் பீமர் (மார்புக்கு நேராக வீசப்படும் பந்து) வகைப்பந்துகளை கவாஸ்கர் எப்போதும் தொல்லையாக கருதமாட்டார். ஆனால் கவாஸ்கர் நாய்களைக் கண்டு பெரிதும் பயப்படுவார். எனது நாய்க்கு"பவுன்சர், பீமர்' என பெயர் வைத்துள்ளேன். இவற்றை தற்போது கண்டாலும் கவாஸ்கருக்கு பயம் தான். இவ்வாறு ரவி சாஸ்திரி எழுதியுள்ளார். 

போத்தம் உறுதி: 

இப்புத்தகத்தில் கவாஸ்கர் பற்றி மற்ற வீரர்களும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். இதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் "ஆல் ரவுண் டர்' இயான் போத்தம் கூறுகையில்,"" இங்கிலாந்தின் டான்டன் நகரில் டெலிபோன் பூத்திற்கு ஒருநாள் கவாஸ்கர் வந்தார். அவர் உள்ளே சென்றதும் ஒரு நாயை வெளியே நிறுத்தி வைத்தேன். நாயை பார்த்து பயந்து போன கவாஸ்கர் சுமார் இரண்டு மணி நேரம் போன் பூத்திற்குள் இருந்தார்,'' என்றார். 

"நம்பர்-1' வீரர்: 

இந்திய அணியின் முன்னாள் வீரர் அசாருதின் கூறுகையில்,""அணியின் "நம்பர்-1' பேட்ஸ்மேன் மற்றும் துவக்க ஆட்டக்காரர் கவாஸ்கர் தான். அவர் வலைப்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஒருநாள் அவரையடுத்து என்னை வலைப்பயிற்சி செய்யுமாறு கூறியிருந்தார். ஆனால் நான் சில நிமிடங்கள் தாமதமாக சென் றேன். பயிற்சி முடிந்து டிரசிங் ரூமிற்கு சென்ற போது, கவாஸ்கர் என்னிடம் ஆத்திரப்பட்டார்,''என்றார். 

கலகலப்பாக இருக்கும்: 

இந்திய அணியில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற கங்குலி இந்த புத்தகத்தில்,"" கவாஸ்கர் நுண்ணறிவும், நகைச்சுவை உணர்வும் மிக்கவர். எப்போதும் கலகலப்பாக இருப்பார்,'' என தெரிவித்துள்ளார். 

நல்ல பாடகர்: 

கவாஸ்கரின் மற்றொரு சகவீரர் அருண்லால் கூறுகையில்,"" தோல்விகளை கூட சகஜமாக எடுத்துக்கொள்வதில் கவாஸ்கர் வல்லவர். வழக்கமாக பாடல்கள் பாடும் அவர், குளியலறையிலும் பாடிக்கொண்டே இருப்பார். இது அமைதியாக இருக்க அவர் செய்யும் தந்திரம்,'' என தெரிவித்துள்ளார்.ரணதுங்கா பாராட்டு: இலங்கை அணிக்கு உலக கோப்பை பெற்றுத்தந்த கேப்டன் ரணதுங்காகூறுகையில்,""இலங்கை அணி முன்னேற வேண்டுமானால், ரணதுங்காவை கேப்டனாக நியமியுங்கள் என ஒருமுறை கவாஸ்கர் தெரிவித்தார். இவரது வார்த்தைகள் பலித்தன. கவாஸ்கர் சொன்னபடி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டதில் மகிழ்ச்சி,'' என்றார். 

நடிகராக ஆசை : 

கவாஸ்கர் குறித்து அவரது கல்லூரி கால நண்பர் மிலிந்த் ரேஜஸ் கூறுகையில்,"" கல்லூரி நாட்களில் கவாஸ்கர் நடிப்பதற்கு மிகவும் ஆசைப்பட்டார். "தம் மரோ தம்' பாடல் எங்களது கல்லூரியில் படமாக்கப்ட்டது. இதில் நடிக்க தேவ் ஆனந்த் வந்திருந்தார். அதில் நிறைய மாணவர்கள் நடித்தால் நல்லது என விரும்பினார். அப்போது கவாஸ்கர் கல்லூரியை "கட்' அடித்துவிட்டு "ஸ்கிரீன் டெஸ்டிற்கு' சென்றார். கிரிக்கெட் டிற்கு வராமல்இருந்திருந்தால் நடிகராகி இருப்பார். இதில்ஆச்சரியம் இல்லை,'' என தெரிவித்துள்ளா

No comments:

Post a Comment