200 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார், தெண்டுல்கர்

இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் மற்றுமொரு உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் தனி நபர் ஒருவர் பெற்றுக் கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை டெண்டுல்கர் முறியடித்துள்ளார்.

தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக குவாலியூரில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

இதுவரையில் 2962 சர்வதேச ஓருநாள் போட்டிகள் நடைபெற்றுள்ளதாகவும், இதில் பெற்றுக் கொள்ளப்பட்ட முதலாவது இரட்டைச் சதம் டெண்டுல்கரினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சிம்பாப்வே அணியைச் சேர்ந்த சார்ளஸ் கெவன்ட்ரியினால் ஆட்டமிழக்காது பெற்றுக் கொள்ளப்பட்ட 194 ஓட்டங்களே இதுவரையில் உலக சாதனையாக காணப்பட்டது.

இன்றைய தினம் நடைபெற்ற போட்டியில் சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 3 சிக்ஸர்கள் 25 பவுண்டரிகள் அடங்களாக 200 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 47 சதங்களையும், சர்வதேச ஒருநாள் போட்டியில் 45 சதங்களையும் இதுவரையில் பெற்றுக் கொண்டுள்ளார்.

டெல் ஸ்டெய்ன், சார்ள்ஸ லங்வெர்ட், ஜெக்ஸ் கலீஸ், வெயன் பார்னல் உள்ளிட்ட வலுவான தென் ஆபிரிக்க அணியின் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சச்சின் டெண்டுல்கர் இந்த உலக சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment