சச்சின் டெண்டுல்கர் பேட்டி

சாதனைகள் முறியடிக்க வேண்டியவை என்றும், தன்னுடைய இரட்டை சத சாதனையை ஒரு இந்திய வீரர் முறியடித்தால் மகிழ்ச்சி அடைவேன்என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

.
குவாலியரில் நேற்றுநடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆட்டம் இழக்காமல் இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.

ஒருநாள் போட்டிகள் அறிமுகமாகி 40 ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை நடைபெற்ற 2961 போட்டிகளில் வேறு எந்த வீரரும் இரட்டை சதத்தை தொட்டியிராத நிலையில் முதல் முறையாக சச்சின் டெண்டுல்கர் 200 ரன்களை குவித்து ஒருநாள் போட்டிகளில் எவரெஸ்ட் சிகரத்தை தொட்டிருக்கிறார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த வீரர் என்னும் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

இதற்கு முன்னர் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 194 ரன்களை குவித்ததே அதிகபட்ச ரன்னாக இருந்தது. ஜிம்பாப்வே வீரர் காவன்ரியும் 194 ரன்களை குவித்துள்ளார்.

இரட்டை சதம் அடித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறியதாவது:

எந்த சாதனையும் முறியடிக்க முடியாததல்ல; சாதனைகள் முறியடிக்கப்பட வேண்டியவை. என்னுடைய சாதனையை ஒரு இந்திய வீரர் முறியடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.

நான் சாதனைகளுக்காக விளையாடுவதில்லை. கிரிக்கெட் ஆட்டத்தை நேசித்து விளையாடுகிறேன். சாதனைகள் தானாக நிகழ்த்திருக்கின்றன. இருப்பினும் சாதனைகள் மகிழ்ச்சியை தருகிறது. இந்த சாதனையை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரிசளிப்பு விழாவின் போது மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், சச்சினின் இரட்டை சாதனையை கவுரவிக்கும் வகையில் சாலை ஒன்றிற்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று அறிவித்தார்.

No comments:

Post a Comment